
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்ததோடு, ‘சோக்கர்ஸ்’ என்ற அடையாளத்தையும் உடைத்தது தென் ஆப்பிரிக்கா அணி. மேலும், கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக் கணத்தை உருவாக்கி தந்த ‘இருவர்’ எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களின், வரலாற்றின் மூலப்படிவமாக இந்த வெற்றி நீண்ட காலம் நிலைத்து நிற்கும். எப்படி 1983 உலகக் கோப்பை இந்திய வரலாற்றில் ஒரு நாட்டுப்புறக் கதை போல் புழங்கத் தொடங்கி அதிலிருந்து பலரும் உத்வேகம் பெற்று கிரிக்கெட் இன்று இந்திய அணியை இந்த நிலைக்கு வளர்த்து விட்டதோ, அதேபோல் தென் ஆப்பிரிக்கா அதன் நீண்ட கால நிறவெறி மற்றும் வெள்ளை இன அடக்குமுறைகளில் இருந்து மீண்ட பிறகு ஏகப்பட்ட ஐசிசி தொடர் முக்கியக் கட்ட ஏமாற்றங்களுக்குப் பிறகு இப்போது வென்று கருப்பரின இளைஞர்களுக்கு ஓர் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/xsQ7cE5