சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2024: விதித் குஜராத்தியை 5 மணி நேரம் போராடி வென்றார் அர்ஜுன் எரிகைசி

சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று தொடங்கியது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவு முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, சகநாட்டைச் சேர்ந்த விதித் குஜராத்தியுடன் மோதினார். அர்ஜுன் எரிகைசி கருப்பு காய்களுடனும், விதித் குஜராத்தி வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.

இதில் 96-வது நகர்த்தலின் போது அர்ஜுன் எரிகைசி வெற்றியை வசப்படுத்தினார். இதனால் அவர், முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார். இந்த ஆட்டம்சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/j63zPXE