கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் | பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி வெற்றி

டொராண்டோ: பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா 45-வது காய் நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி 40-வது காய் நகர்த்தலின்போது பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜாவை தோற்கடித்தார்.

இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா மோதிய ஆட்டம்40-வது காய் நகர்த்தலின்போதுடிராவில் முடிவடைந்தது. ரஷ்யகிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனா ஆகியோர் மோதிய ஆட்டமும் 41-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/98pPolU