
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆப்கானிஸ்தான் அணி.
கொழும்பு நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 62.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 139 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் விஷ்வாபெர்னாண்டோ 4 விக்கெட்களையும், அஷிதாபெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3nK9ilW