IND vs ENG 2-வது டெஸ்ட் | ஷுப்மன் கில் சதம் விளாசல் - இங்கிலாந்துக்கு 399 ரன்கள் இலக்கு

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி.

விசாகப்பட்டினத்தில் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதன்படி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. கைவசம் 4 விக்கெட்கள் இருக்க நேற்று 2-வது நாள்ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது இந்திய அணி. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 209 ரன்களில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, இதன்பின் வந்தவர்கள் விரைவாகவே விக்கெட்டை இழந்தனர். இதனால், 112 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/AvnFBOa