சென்னையில் இன்று முதல் அகில இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டி

சென்னை: தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், 35-வது அனைத்து இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டி பிப்ரவரி12-ம் தேதி (இன்று) தொடங்கிவரும் 16-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 35-வது ஹாக்கி போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் பிப்ரவரி 12-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. தொடக்க விழாவில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ஹாக்கி ஒலிம்பிக் வீரர் ஆடம் ஆண்டனி சின்கிளேர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ACIGu7g