
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். அணியில் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளார். ரோகித் மற்றும் கோலி என இருவரும் கடைசியாக கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் விளையாடி இருந்தனர். அதன் பிறகு இப்போதுதான் சர்வதேச டி20 போட்டியில் விளையாட உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/6kcRJKu