“இந்திய பிட்ச்களுக்கு ஒரு நிலைப்பாடு... மற்ற பிட்ச்களுக்கு வேறு நிலைப்பாடா?” - ஐசிசி மீது ரோகித் சர்மா காட்டம்

கேப்டவுன்: “பிட்ச்களின் தரத்தை மதிப்பீடு செய்வதில் ஐசிசியும் அதன் ஆட்ட நடுவர்களும் ஏன் இரட்டை நிலைப்பாடு கொள்கின்றனர், பாரபட்சம் பார்க்கின்றனர்? இது ஏன் என்று தெரியவில்லை” என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த கேப்டவுன் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் மிக துரிதமாக முடிவடைந்த போட்டி என்ற சாதனையை நிகழ்த்த கேப்டவுன் பிட்ச் காரணமாக அமைந்தது. கேப்டவுன் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக திகழ்ந்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்தப் போட்டிக்கு பின் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, “நாம் இங்கு, இந்த டெஸ்ட் போட்டியில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம். எனக்கு உள்ளபடியே இப்படிப்பட்ட பிட்ச்களில் ஆடுவதில் எந்த ஒரு தயக்கமோ பிரச்சினைகளோ இல்லை. அதாவது இந்தியாவில் போடப்படும் பிட்ச்கள் பற்றி வாயை மூடிக்கொண்டிருக்கும் வரை இப்படிப்பட்ட பிட்ச்கள் பற்றி எனக்கு கவலையில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/gHJXCOS