ODI WC 2023 | இங்கிலாந்தை இம்சித்த ரச்சின் - கான்வே கூட்டணி: 9 விக்கெட்டுகளில் நியூஸி. அபார வெற்றி

அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளன. தொடக்க நாளான இன்று முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் சீனியர் வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தி இடம்பெறவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/T6XFuUl