Asian Games 2023 | கனவு வேலைக்காக 3 மணி நேரம் மட்டுமே உறக்கம் - பருல் சவுத்ரி தங்கம் வென்ற கதை!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் பருல் சவுத்ரி. தனது கனவு வேலைக்காக மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கிய கதையை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் வெள்ளி, மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் என இந்தியாவை கடந்த இரண்டு நாட்களாக தலைநிமிர செய்து வருகிறார் பருல் சவுத்ரி. நேற்று முன்தினம் இரவு 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் தங்கத்தை தவறவிட்ட பருல் அடுத்த 24 மணிநேரத்தில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தனது கனவான தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/5nN8HyO