‘தோனி, யுவராஜ் சிங் செய்ததை சூரியகுமார் யாதவ்தான் செய்ய முடியும் ரோஹித், கோலியாலும் முடியாது’ - ஹர்பஜன் சிங்

புதுடெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 11 வீரர்களில் சூரியகுமார் யாதவ் இருந்தே ஆக வேண்டும். அவர் இறங்கும் நிலையில் கோலி, ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன் கூட சூரியகுமார் போல் ஆட முடியாது என்று முன்னாள் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது போல் தெரிந்தாலும் விட்டு விட்டு அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் போது ஒவ்வொரு போட்டியும் புதிய போட்டிதான் தொடர்ச்சி இருக்காது ஆகவே அவருக்குப் பதிலாக சூரிய குமார் யாதவ்வை எடுத்திருக்கிறார்கள் என்றால் அது சூரியகுமார் யாதவ் மேல் இருக்கும் நம்பிக்கையை விட சஞ்சு சாம்சன் மீதான அவநம்பிக்கை என்றே கூற வேண்டியுள்ளது. ஆனால் ஹர்பஜன் சிங் சூரிய குமார் போல் சஞ்சுவெல்லாம் ஆட முடியாது என்று ஒரே போடாக போட்டு விட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/NKbOU5x