ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பிற்பகல் 3 அணி அளவில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இந்தத் தொடரில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்தது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு இது 2-வது ஆட்டமாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/CBkIqzd