
இலங்கை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 266 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி அணிக்கு பலம் சேர்த்தனர்.
இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். சுப்மன் கில் நிதாமன் கடைபிடிக்க, ரோஹித் சர்மா 2 ஃபோர்களை அடித்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால் அந்த நம்பிக்கை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 5ஆவது ஓவரில் ஷாகீன் அப்ரீடி வீசிய பந்தில் போல்டானார். 11 ரன்களில் கிளம்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/95jcTZr