ODI WC 2023 | “நிச்சயம் நான் இருப்பேன்” - தன்னை டேக் செய்த ரசிகருக்கு தினேஷ் கார்த்திக் பதில்

சென்னை: எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் தான் இருப்பேன் என தன்னை டேக் செய்த ரசிகருக்கு பதில் கொடுத்துள்ளார் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்.

38 வயதான தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக கடந்த 2004 முதல் விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தார். இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/uWRIXxA