
சிட்னி: இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த நிலையில் இந்த தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஐசிசி விதிகளின்படி செப்டம்பர் 28-ம் தேதிக்கு முன்னதாக இந்த அணி 15 வீரர்கள் என்ற அளவில் குறைக்கப்படும். ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/klJu32g