உலக தடகள சாம்பியன்ஷிப் | அவினாஷ் சேபிள், ஷாய்லி சிங் ஏமாற்றம் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெறத் தவறினர்

புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் தேசிய சாதனையாளரான இந்தியாவின் அவினாஷ் சேபிள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறினார். இதேபோன்று மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஷாய்லி சிங்கும் ஏமாற்றம் அளித்தார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் தேசிய சாதனையாளரான இந்தியாவின் அவினாஷ் சேபிள் ஹீட் பிரிவில் 8 நிமிடங்கள் 22.24 விநாடிகளில் கடந்து 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஹீட்பிரிவில் முதல் 5 இடங்களை பிடிக்கும் வீரர்களே இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/zgFlSYV