நம்பிக்கையூட்டும் பும்ரா, பிரசித் கிருஷ்ணா! - ஆனாலும்....

முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு 11 மாதங்களுக்குப் பிறகு பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா நேற்று அயர்லாந்துக்கு எதிராக பந்து வீசி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். அதே போல் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் உடல் நிலை நன்றாகத் தேறியிருப்பது அவரது பந்து வீச்சு வேகத்தில் தெரிந்தது.

பும்ரா அதிகபட்சம் 141 கிமீ வேகம் வீசினால் பிரசித் கிருஷ்ணா மணிக்கு 145 கிமீ வேகம் தொட்டார். இருவருமே பவுன்சர்கள், யார்க்கர்கள், ஸ்லோயர் பந்துகள் என்று அனைத்து ஆயுதங்களையும் திறம்பட பயன்படுத்தினர். பும்ரா 127 கிமீ வேகத்திலிருந்து மெல்ல 135 கிமீ, 141 கிமீ வேகம் வரை தொட்டார். இருவரது பவுலிங் ஆக்‌ஷனிலும் எந்த வித அசவுகரியமும் அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் எச்சரிக்கை தேவை. உடனடியாக மணிக்கு 145 கிமீ-க்கும் மேல் வீசும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. காயத்துக்குக் காரணமாகும் பந்து வீச்சு முயற்சிகளைக் கைவிட வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/iM1pAlB