
மும்பை: திலக் வர்மா அபார திறன் படைத்த வீரர் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் திலக் வர்மா விளையாடி வருகிறார். இந்த தொடரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
20 வயதான திலக் வர்மா, கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியை கேப்டனாக வழிநடத்துவது ரோகித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது ஆட்டத்தை வியந்து இந்திய அணி வீரர்கள் மட்டுமல்லாது பிற அணிகளை சேர்ந்த வீரர்களும் பாராட்டி உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/5X7MLpG