இன்ஸ்டாவில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டுப் பிரபலங்கள்: 3-வது இடத்தில் கோலி

சென்னை: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டுப் பிரபலங்களில் மூன்றாவது நபராக விராட் கோலி உள்ளார். முதல் இரண்டு இடங்களில் கால்பந்தாட்ட வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர். இந்த தகவலை ஹாப்பர் ஹெச்.க்யூ எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்ய பயன்பட்டு வருகிறது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம். இது மெட்டா நிறுவனத்தின் வசம் உள்ளது. இதில் பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பலரும் பயனர்களாக உள்ளனர். இவர்களில் அதிக ஃபாலோயர்களை பெற்றவராக உள்ளார் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ. சுமார் 59,68,48,846 பேர் அவரை இந்த தளத்தில் பின்தொடர்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/DPy5Rz3