
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 3 முதல் 13-ம் தேதி வரையில் இந்த 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. டிரினிடட், கயானா, புளோரிடா ஆகிய இடங்களில் இந்த போட்டிகள் விளையாடப்படுகிறது. அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டே இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/iYnl6dZ