
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் அரினா சபலெங்கா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் அரினா சபலெங்கா, 25-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அரினா சபலெங்கா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/j2ROguP