
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
காலே நகரில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ரன்களும் பாகிஸ்தான் அணி 461ரன்களும் எடுத்தன. 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 83.1 ஓவரில் 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/y3OblCt