
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஒரு மோட்டார் வாகனப் பிரியர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எண்ணிலடங்கா பைக் மற்றும் கார்கள் அவர் வீட்டு கேராஜில் அணிவகுத்து நிற்கின்றன.
தோனி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் தொடக்க நாட்களில் தனக்கும், சக வீரர்களுக்கும் போட்டிகளின்போது பரிசாக வழங்கப்படும் வாகனங்களை மைதானத்துக்குள் ஜாலியாக ரைடு செய்வது வழக்கம். கடந்த பிப்ரவரியில் தனது வீட்டில் இருந்து ராஞ்சி கிரிக்கெட் மைதானத்துக்கு அப்பாச்சி (Apache RR 310) பைக்கில் தோனி வந்திருந்தார். சென்னை வீதிகளிலும் தோனி பைக் ஓட்டியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/TjixlI4