
துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து 758 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஐசிசி தரவரிசையில் இலங்கை வீராங்கனை முதலிடத்தை கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும். அவர், சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
3 ஆட்டங்கள் கொண்ட அந்தத் தொடரில் சமாரி அதபத்து இரு சதங்கள் விளாசியிருந்தார். இதன் மூலம் 6 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஒரு இடம் பின்தங்கி 6-வது இடத்தையும், ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் பின்தங்கி 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பந்து வீச்சு தரவரிசையில் இந்தியாவின் ராஜேஷ்வரி கெய்க்வாட் 8-வது இடத்திலும், தீப்தி சர்மா 10-வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் 751 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/teqUxwB