இநதனஷய ஓபன படமணடன: கல இறத சறறல நழநதர ஸரகநத

ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி காந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து 2-வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி காந்த், சகநாட்டைச் சேர்ந்த லக்‌ஷயா செனுடன் மோதினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தனது அனுபவத்தால் காந்த் 21-17, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/e2CYfNL