உலகக கபப கரககட தகத சறற இனற தடககம

ஹராரே: ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நேபாளம் அணிகள் பகல் 12.30 மணிக்கு மோதுகின்றன.

ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர்-செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் தரவரிசை அடிப்படையில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்து கொள்கின்றன. மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் இன்று தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/p9QR0tU