
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ரிஷப் பந்த், கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். இந்த நிலையில் ஊன்றுகோல் துணையின்றி தான் படியேறி வரும் வீடியோ ஒன்றை பந்த் பகிர்ந்துள்ளார். இதோடு தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் மேற்கொண்டு வரும் பயிற்சி சார்ந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
‘நாட் பேட் ரிஷப். எளிய விஷயங்களும் சில நேரங்களில் கடினமாக இருக்கும்’ என ரிஷப் பந்த் அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார். இதன் மூலம் தனக்கு தானே அவர் ஊக்கம் கொடுத்துக் கொள்கிறார் என புரிந்துகொள்ள முடிகிறது. அவரது வீடியோவுக்கு சக இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேல், கமெண்ட் செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/onuvNb0