
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 69-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது மும்பை. கேமரூன் கிரீன், 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார்.
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் விவ்ராந்த் சர்மா மற்றும் மயங்க் அகர்வால். அந்த அணிக்காக அதிகபட்சமாக விவ்ராந்த் 69 ரன்களும், மயங்க் 83 ரன்களும் எடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/en2gP5l