‘ஜென்டில்மேன் விளையாட்டில்’ ஜென்டிலாக மோதிக் கொண்ட கோலி, கம்பீர்

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிரிக்கெட் அரங்கில் இது பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 127 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டம் முடிவடைந்ததும் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கும், லக்னோ அணியின் வழிகாட்டியான இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/7c28OtP