
லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விலகியுள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் காயமடைந்தார். அதன் காரணமாக அவர் விலகி உள்ளதாக லக்னோ அணி நிர்வாக அறிவித்துள்ளது. அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் தசைநார் சிதைவு ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கு அறுவை சிகிச்சை அவசியம் என்றும் தெரிந்து கொண்டதாக லக்னோ அணி தெரிவித்துள்ளது. அவரை இந்த நேரத்தில் அதிகம் மிஸ் செய்வதாக லக்னோ அணி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
அவருக்கு தேவையான ஆதரவை லக்னோ அணி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 274 ரன்களை ராகுல் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 34.25. இரண்டு அரை சதங்கள் பதிவு செய்துள்ளார். லக்னோ அணியின் மற்றொரு வீரரான உனத்கட் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/7R9n5qg