ஆசிய கால்பந்தில் கடினமான பிரிவில் இந்திய அணி

தோகா: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் தோகாவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடருக்கான டிரா நேற்று தோகாவில் நடைபெற்றது. தொடரில் கலந்து கொள்ளும் 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் உள்ளன.

இந்த தொடரில் விளையாட தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெற்றுள்ள இந்திய அணி கடினமான ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் உள்ளன. கடந்த முறை நடைபெற்ற தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தியது. ஆனால் அடுத்த இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து வெளியேறியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/0BXJ8ci