
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு வலது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
31 வயதான அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வழிநடத்தி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர் காயமடைந்தார். அதனால் ஐபிஎல் சீசனின் எஞ்சிய போட்டிகள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் விலகினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/LbVTAOU