
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி, ‘வணக்கம் வாழவைக்கும் சென்னை! இன்னைக்கு மேட்சுக்கு ரெடியா?’ என சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது
நடப்பு ஐபிஎல் சீசனின் 55-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் டெல்லி அணியின் கேப்டன் வார்னர் என இருவரும் இணைந்து நிற்கும் படம் ஒன்றை பகிர்ந்துள்ளது டெல்லி அணி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/fHkn47b