RCB vs LSG | கடைசி பந்தில் தடுமாறிய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்: வெற்றியை வசமாக்கிய லக்னோ!

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.

கடைசிப் பந்தை தாழ்வாக செல்லும் வகையில் லோ ஃபுல்-டாஸாக வீசி இருந்தார் ஆர்சிபி பவுலர் ஹர்ஷல் படேல். அந்த பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த லக்னோ வீரர் ஆவேஷ் கான் மிஸ் செய்தார். பந்து ஸ்டம்பை தகர்க்கத் தவறியது. இருந்தும் ரன் எடுக்க ஓட்டம் பிடித்தனர் லக்னோ வீரர்கள். அதே நேரத்தில் அதை தடுக்கும் வகையில் பந்தை பற்றியவுடன் ஸ்டம்பை தகர்க்கும் நோக்கில் வலது கையில் அணிந்திருந்த கையுறையை நீக்கி இருந்தார் ஆர்சிபி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/PmbDad4