IPL | ‘சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்’ - டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர்!

டெல்லி: டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிதொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் வீழ்ந்திருந்தது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் டேவிட் வார்னர் கூறியதாவது.

ஆடுகளத்தில் பந்துகள் நான் எதிர்பார்த்ததை விட அதிகம் ஸ்விங் ஆனது. பவர்பிளேவில் விக்கெட்களை இழந்தால் சிரமமாக இருக்கும். குஜராத் அணியினர் சூழ்நிலையை எவ்வாறு தகவமைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்பதை எங்களுக்கு காட்டினர். இது எங்களுக்கு சிறந்த பாடம். சொந்த மைதானத்தில் இன்னும் 6 ஆட்டங்களில் விளையாட உள்ளோம். அதில் சிறப்பாக செயல்ட முயற்சிப்போம். குஜராத் வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/82RE61G