
பஞ்சாப்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டை இழந்து 146 ரன்களை சேர்த்தது. வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற சூழலில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் - ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தது. பிரப்சிம்ரன் சிங் 2 சிக்ஸர், 2 ஃபோர் என அதிரடி ஆட்டத்தில் இறங்கினாலும் 2-வது ஓவரிலேயே அவுட்டாகி நடையைக் கட்டினார். பனுகா ராஜபக்‌ஷா, ஷிகர் தவான் பாட்னர்ஷிப் அமைத்து, கொல்கத்தாவின் பந்துகளை பஞ்சாக பறக்கவிட்டனர். இருவரின் அதிரடியால் பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 100 ரன்களைச் சேர்த்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/aeAvkFL