பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு சிக்ஸர் விளாசி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் வருத்தம்

குவாஹாட்டி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றிக்கான ஒரு பந்தை விளாசியிருந்தால் போட்டியை வெற்றிகரமாக முடித்திருப்போம் என ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு குவாஹாட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 198 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. துரத்தலின் போது ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். எனினும் அவர் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/w98TXY4