
மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங் செய்த போது ஆஸ்கர் விருது வென்று ‘நாட்டு நாட்டு’ பாடலின் ட்ரேட்மார்க் நடன அசைவுகளை போட்டு மகிழந்துள்ளார் இந்திய வீரர் விராட் கோலி. அதை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர் விருதை பெற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/kmhGHaL