
சிட்னி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விழித்தெழ வேண்டிய நேரம் இது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் அட்டவணையை விமர்சிக்கும் வகையில் அவர் இதனை சொல்லியுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன.
எதிர்வரும் ஜூன் 7 - 11-ம் தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளது. டைட்டானிக் படத்தில் நாயகன் கடைசி நேரத்தில் கப்பலுக்கான டிக்கெட்டை பெறுவதை போல கடைசி நேரத்தில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான நியூஸிலாந்து அணியின் வெற்றி இரண்டாவது முறையாக இந்தியாவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றுள்ளது. இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/vbpEoPL