மறக்குமா நெஞ்சம் | 2012-ல் இதே நாளில் சதங்களில் சதம் கண்ட சச்சின்

சென்னை: கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத பல தருணங்கள் அவர்களது மனதோடு நிறைந்திருக்கும். அதில் ஒன்றுதான் இந்திய அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் பதிவு செய்த நூறாவது சதம். இதோ அந்த மைல்கல் சாதனை படைக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்னும் அந்த சாதனை அப்படியே தகர்க்கப்படாமல் உள்ளது.

‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என கிரிக்கெட் உலகில் அறியப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என மொத்தம் 100 சதங்களை சர்வதேச கிரிக்கெட் உலகில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த அந்த நூறாவது சதம் இதே நாளில் கடந்த 2012-ல் பதிவு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/DKYgcEx