ஐபிஎல் டி20 தொடருக்காக நியூஸி. அணியில் வில்லியம்சன், சவுதி விடுவிப்பு

வெலிங்டன்: இலங்கை அணியானது நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூஸிலாந்து அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் இரு அணிகளும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதில் ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 25, 28, 31-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் விதமாக அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் செய்யப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/lXIp2JF