WT20 WC | கேப்டன் ஹர்மன்பிரீத், ரிச்சா கோஷ் பொறுப்பான ஆட்டம்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி

கேப் டவுன்: நடப்பு டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் என இருவரும் பொறுப்புடன் ஆடி வெற்றியை வசம் செய்தனர்.

தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 26-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. குரூப் மற்றும் நாக்-அவுட் என 23 போட்டிகள் நடைபெறுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/bNGmhRu