Ind vs Aus Test | கேப்டனாக முதல் சதம் முதல் அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்கள் வரை - இரண்டாம் நாள் ஹைலைட்ஸ்

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசினார். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் அரை சதம் அடித்தனர்.

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி முதல்இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மார்னஷ் லபுஷேன் 49, ஸ்டீவ் ஸ்மித் 37, அலெக்ஸ் கேரி 36, பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 31 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 5, அஸ்வின் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/os8Ql2N