
சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
100 புள்ளிகள் கொண்ட சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடியானது போர்ச்சுகலின் ஃபிரடெரிகோ ஃபெரீரா சில்வா, அமெரிக்காவின் நிக்கோலஸ் மோரேனோ டி அல்போரன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/a0n731R