எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி சாம்பியன்

சென்னை: சென்னை பல்கலைக்கழக மண்டல அளவிலான மகளிருக்கான தடகள போட்டி கடந்த 7-ம் தேதி சேத்துப்பட்டில் நடைபெற்றது. இதில் எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி 10 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. ராணி மேரி கல்லூரி 2-வது இடத்தையும், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி 3-வது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குனர் அமுதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/lUa4Ee7