
மவுண்ட் மாங்குனியில் நடைபெறும் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான பகலிரவு முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளான இன்று டாம் பிளண்டெலின் அட்டகாசமான சதத்துடன் நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 306 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் 325 ரன்களுக்கு அருகில் வந்தது. இங்கிலாந்து ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்து மொத்தமாக 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆட்ட முடிவில் ஆலி போப், 14 ரன்களுடனும், இரவுக்காவலன் பிராட், 6 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். முன்னதாக, இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி 6 பவுண்டரிகளுடன் அதிரடியாக 28 ரன்களையும், பென் டக்கெட் 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தும் குக்கலைன் வேகத்தில் வெளியேறினர். இங்கிலாந்து தன் அதிரடி முறைகளை மாற்றிக் கொள்வதாக இல்லை. பிராட் இறங்கிய வேகத்தில் மேலேறி வந்து அடிக்கப் போய் கொடியேற்றிய கேட்சை விக்கெட் கீப்பர் பிளண்டெலும், பவுலர் குக்கலைனும் ஒருவருக்கொருவர் வேடிக்கைப் பார்த்துக் கோட்டை விட்டனர். இங்கிலாந்து 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எங்க வேகவேகமாக ரன்களைக் குவித்து வருகின்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/OakEQJh