ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டாரா? - இஷாந்த் சர்மாவிடம் துருவித் துருவி கேட்ட பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு

சமீபத்திய இந்திய அணியின் வெளிநாட்டு வெற்றிகளில் பெரும்பங்காற்றி உலக வேகப்பந்து வீச்சாளர்களில் தனக்கென ஒரு பாணியையும், ஓர் இடத்தையும் பெற்றவர் முகமது ஷமி. ஆனால், அவரது திருமண வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக இல்லை என்பதோடு, அவரைப் பிரிந்து சென்ற மனைவி ஹசின் ஜகான், ஷமி மீது கண்டபடி குற்றச்சாட்டுகளை சுமத்திய சம்பவங்களும் நடந்தன. இதில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொன்று வரும் வகையிலான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டும் அடங்கும்.
ஷமி தற்போது இந்திய அணிக்கு ஒரு பெரும் சொத்து. ஆனாலும் இந்த உயர்நிலையை அவர் எட்டுவதற்கான அவரது பயணம் எளிதானது அல்ல. தொழில்முறை கிரிக்கெட்டில் ஷமி எப்போதுமே நம்பமுடியாத திறமையான வேகப்பந்து வீச்சாளராகக் காணப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையை சமாளிக்க அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/VsdKCNQ