ஆஸி. பவுலிங்கை ‘அசால்ட்’ செய்த ரோகித் சதம்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 50+ ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினார். 120 ரன்கள் எடுத்த நிலையில் அவர் தனது விக்கெட்டை இழந்தார்.

இந்தப் போட்டி நேற்று துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 177 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தை 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/7BszSIX