
சென்னை: சென்னையில் இன்று முதல் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (டிஎன்டிஏ) ஆதரவுடன் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் முதல்நிலை வீரராக சீன தைபேயைச் சேர்ந்த 21 வயதான சென் சியூன் ஹிசின் உள்ளார். அவர் உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் 115-வது இடத்தில் உள்ளார்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு ரூ.14.47 லட்சமும், 100 ஏடிபி ரேங்கிங் புள்ளிகளும் கிடைக்கும். இந்தப் போட்டியில் ஸ்வீடனைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் ஜான் போர்க்கின் மகன் லியோ போர்க் விளையாடவுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/JofXr1Q