டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசிய ஒரே இந்திய கேப்டன்: ரோகித் சாதனை

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசிய ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறையும், டி20 கிரிக்கெட்டில் 2 முறையும் ரோகித் சதம் பதிவு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசியவர்களாக இலங்கையின் தில்ஷன், தென் ஆப்பிரிக்காவின் டூப்ளசி மற்றும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/qr4ZFxu